ADDED : செப் 20, 2011 11:43 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2011-2012ம் கல்வியாண்டுக்கான அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு தஞ்சை மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு நேற்று தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
பொதுமாறுதல் கலந்தாய்வில் 276 ஆண் ஆசிரியர்களும், 231 பெண் ஆசிரியர்களும் ஆக கூடுதல் 507 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் 73 ஆண் ஆசிரியர்களும், 49 பெண் ஆசிரியர்களும் ஆக கூடுதல் 122 ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணையை தஞ்சாவூர் கல்வி அலுவலர் (பொ) சாந்தமூர்த்தி வழங்கினார்.