/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்திவிபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
ADDED : செப் 20, 2011 08:58 PM
கடலூர் : விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் கடலூரில் ஜப்தி செய்யப்பட்டது.
சிதம்பரம் அடுத்த புத்தூரைச் சேர்ந்தவர் பஷீர் முகமது. இவரது மகன் முகமது பாரூக், 20. கடந்த 2008ம் ஆண்டு செப்., 5ம் தேதி காலை சிதம்பரத்தில் இருந்து மோட்டார் பைக்கில் வந்தபோது வல்லம்படுகை அருகே எதிரில் வந்த கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக பஸ் மோதி இறந்தார். இது குறித்து பஷீர் முகமது கடலூர் முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் வக்கீல்கள் சிவமணி, சரவணன், முகுந்தன் ஆஜராயினர். வழக்கை விசாரித்த நீதிபதி 3 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்ப்பு கூறினார். ஆனால் போக்குவரத்துக் கழகம் அத்தொகையை வழங்காமல் காலம் கடத்தியது. தொடர்ந்து பஷீர் முகமது அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி உத்திராபதி மனுதாரருக்கு வட்டியுடன் சேர்த்து 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். இந்தத் தொகையையும் போக்குவரத்துக் கழகம் செலுத்தவில்லை. இதையடுத்து பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், கோர்ட் அமினாக்கள் நேற்று புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான டி.என்.49-என்.1994 என்ற எண்ணுள்ள பஸ்சை ஜப்தி செய்தனர்.


