Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொழிலாளியைத் தாக்கிய இருவர் கைது

தொழிலாளியைத் தாக்கிய இருவர் கைது

தொழிலாளியைத் தாக்கிய இருவர் கைது

தொழிலாளியைத் தாக்கிய இருவர் கைது

ADDED : செப் 20, 2011 08:57 PM


Google News

திட்டக்குடி : ஆவினங்குடியில் முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியைத் தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி அடுத்த கொடிக்களம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ், 40; கூலித் தொழிலாளி. இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த செல்வமணி என்பவருக்கும் இடப்பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் செல்வமணி மற்றும் அவரது உறவினர் பூராசாமியும் சேர்ந்து செல்வராஜை கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிந்து செல்வமணி, பூராசாமி இருவரையும் கைது செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us