Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பைக் திருட்டு: இரண்டு பேர் கைது

பைக் திருட்டு: இரண்டு பேர் கைது

பைக் திருட்டு: இரண்டு பேர் கைது

பைக் திருட்டு: இரண்டு பேர் கைது

ADDED : செப் 20, 2011 08:53 PM


Google News

காட்டுமன்னார்கோவில் : மோட்டார் பைக் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமன். இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கை ஒருவர் திருடிச் செல்வதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மாயவரம் தாலுகா ஆத்துக்குடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 28, எனவும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் நண்பருடன் சேர்ந்து மோட்டார் பைக் திருடியதை ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் பாபு, 30 என்பவரையும் பிடித்து இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us