திட்டக்குடி : தொழுதூர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்கான பயிலரங்கம் நடந்தது.
கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார். தொழில் வணிகத்துறை பொது மேலாளர் மகாலிங்கம் குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களின் பங்கு, சிறப்பு வகை உற்பத்தி நிறுவனங்களுக்கான சிறப்பு மூலதன மானியம், பின்முறை வட்டி மானியம், மின்னாக்கி மானியம், தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான உதவி திட்டங்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து விளக்கிப் பேசினார். விழாவில் ஆய்வாளர் பிரவின்குமார், இறுதியாண்டு மாணவ, மாணவிகள் மற்றும் துறைத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லூரி துணைமுதல்வர் செல்வராஜ் நன்றி கூறினார்.


