புதிய அரசு கட்டடங்கள் திறப்பு விழா
புதிய அரசு கட்டடங்கள் திறப்பு விழா
புதிய அரசு கட்டடங்கள் திறப்பு விழா
ADDED : செப் 20, 2011 08:52 PM
திட்டக்குடி : பெண்ணாடம் பேரூராட்சியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அரசு கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
பெண்ணாடம் பேரூராட்சி தி.அகரத்தில் எம்.எல். ஏ., தொகுதி மேம் பாட்டு நிதி மூலம் 3 லட்சம் ரூபாயில் புதிய அங்கன் வாடி கட்டடமும், 9வது வார்டில் 3 லட்சம் ரூபாய் செலவில் மகளிர் சுகாதார வளாகமும், சோழன் நகரில் பொதுநிதி மூலம் 4 .25 லட்சம் ரூபாயில் ரேஷன் கடையும் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடங்களை திட்டக்குடி எம்.எல்.ஏ., தமிழ் அழகன் திறந்து வைத்தார். விழாவில் பேரூராட்சித் தலைவர் அமுதலட்சுமி, செயல் அலுவலர் ராம்குமார், துணைத் தலைவர் காதர் உட்பட பலர் பங்கேற்றனர்.


