/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற ஆர்வம் : "செக் பவர்' உள்ளதால் போட்டா போட்டிஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற ஆர்வம் : "செக் பவர்' உள்ளதால் போட்டா போட்டி
ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற ஆர்வம் : "செக் பவர்' உள்ளதால் போட்டா போட்டி
ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற ஆர்வம் : "செக் பவர்' உள்ளதால் போட்டா போட்டி
ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற ஆர்வம் : "செக் பவர்' உள்ளதால் போட்டா போட்டி
கடலூர் : உள்ளாட்சி பதவிகளில் நிதி கையாளும் (செக் பவர்) அதிகாரம் ஊராட்சித் தலைவருக்கு மட்டுமே உள்ளதால், இப்பதவிகளில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் கடற்கரையொட்டிய கொத்தட்டை, வில்லியநல்லூர், அரியகோஷ்டி, சி.புதுப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் தனியார் அனல் மின் நிலையம், தனியார் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இக்கம்பெனிகள் மூலம் ஊராட்சிக்கு அதிகளவில் வருமானம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எந்த உள்ளாட்சி அமைப்பிற்கும் இல்லாத நிதி கையாளும் அதிகாரம் உள்ளதால் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட கிராம மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. அதிலும், வருவாய் அதிகம் உள்ள ஊராட்சிகளின் தலைவர் பதவியை கைப்பற்றிட ஒவ்வொரு ஊராட்சியிலும் பலர் முயன்று வருகின்றனர். இதற்காக பல லட்சங்களை செலவு செய்யவும் தயாராகி வருகின்றனர். தற்போது ஊராட்சித் தலைவர்களாக பதவி வகித்து வருபவர்கள், வரும் உள்ளாட்சித் தேர்தலில் எப்படியும் மீண்டும் தலைவர் பதவியை பிடித்தாக வேண்டும் என்பதற்காக தங்கள் பகுதிகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த குப்பைகளை அகற்றுதல், சாலைகளை சரி செய்தல், தெரு விளக்கு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பொது நிதியிலிருந்து அவசரமாக நிறைவேற்றி வருகின்றனர்.
மாவட்டத்தில் கிராம உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகள் விவரம் ஒன்றியம் வாரியாக:
ஒன்றியம் ஊராட்சிகள் ஒன்றியக்குழு மாவட்டக்குழு உறுப்பினர் உறுப்பினர்


