வாக்காளர் பட்டியல் கலெக்டர் வெளியீடு
வாக்காளர் பட்டியல் கலெக்டர் வெளியீடு
வாக்காளர் பட்டியல் கலெக்டர் வெளியீடு
ADDED : செப் 20, 2011 01:26 AM
கரூர்: கரூர் மாவட்ட வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ÷ஷாபனா நேற்று வெளியிட்டார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என தெரிகிறது. இன்னும் இரண்டொரு நாளில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாநிலம் முழுவதும் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய விபரங்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா வெளியிட்டார். கரூர் மாவட்டத்தில் மூன்று லட்சத்து 55 ஆயிரத்து 702 ஆண் வாக்காளர்களும், மூன்று லட்சத்து 63 ஆயிரத்து 340 பெண் வாக்காளர்களும், 27 திருநங்கைகளும் என மொத்தமாக ஏழு லட்சத்து 19 ஆயிரத்து 69 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 1,306 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள், டவுன் பஞ்சாயத்து அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் பொதுமக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் வரைவுப்பட்டியில் வெளியீடு நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., கிறிஸ்துராஜ், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரேமாவதி, திட்ட அலுவலர் முருகன், மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் மாறன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


