Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/இளைஞர் காங்., நிர்வாகி பேச்சு தி.மு.க.,வை விட்டு வந்ததால் தேர்தலில் காங்., வெற்றி பெறும்

இளைஞர் காங்., நிர்வாகி பேச்சு தி.மு.க.,வை விட்டு வந்ததால் தேர்தலில் காங்., வெற்றி பெறும்

இளைஞர் காங்., நிர்வாகி பேச்சு தி.மு.க.,வை விட்டு வந்ததால் தேர்தலில் காங்., வெற்றி பெறும்

இளைஞர் காங்., நிர்வாகி பேச்சு தி.மு.க.,வை விட்டு வந்ததால் தேர்தலில் காங்., வெற்றி பெறும்

ADDED : செப் 20, 2011 01:03 AM


Google News

ஆத்தூர்: ''உள்ளாட்சி தேர்தலில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு, 50 சதவீதம் 'சீட்' வழங்க வேண்டும்.

தி.மு.க.,வை விட்டு விலகி வந்ததால், காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும்,'' என, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சத்யா சண்முகம் தெரிவித்தார். சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலில் விருப்ப மனு பெறுதல் மற்றும் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்தல் குறித்து, இளைஞர் காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சத்யா சண்முகம், கூறியதாவது: கட்சியின் வேராகவும், கட்சியை வலுப்படுத்துவதற்கும், உள்ளாட்சி பதவிகள் முக்கியம். சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என வலியுறுத்தி வந்தோம். தற்போது, உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வை விட்டு விலகி வந்து தனித்து போட்டியிடுவதால், அதிகளவில் வெற்றிபெற முடியும். உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி, யூனியன், பேரூராட்சி என, அனைத்து பதவியிடங்களுக்கும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு, 50 சதவீதம் சீட் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us