Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மின் ஊழியர் பற்றாக்குறையால் மின்தடை சீரமைப்பில் சிக்கல்

மின் ஊழியர் பற்றாக்குறையால் மின்தடை சீரமைப்பில் சிக்கல்

மின் ஊழியர் பற்றாக்குறையால் மின்தடை சீரமைப்பில் சிக்கல்

மின் ஊழியர் பற்றாக்குறையால் மின்தடை சீரமைப்பில் சிக்கல்

ADDED : செப் 20, 2011 01:03 AM


Google News

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில் மின் ஊழியர்கள் பற்றாக்குறையால், அடிக்கடி ஏற்படும் மின் தடையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

பனமரத்துப்பட்டி தமிழ்நாடு மின் வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில், இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு நகர் பிரிவு, புறநகர் பிரிவு என, இரு அலுவலங்கள் செயல்பட்டு வருகிறது. நகர் பிரில், பனமரத்துப்பட்டி, கோம்பைக்காடு, நல்லியாம்புதூர், பள்ளித்தெருப்பட்டி, பெரமனூர், சந்தியூர், பாரப்பட்டி, வீராசாமி புதூர், அம்மாபாளைம் என, மொத்தம் உள்ள, 9 குறு மின் வினியோக வட்டத்தில், 80க்கும் மேற்பட்ட டிரான்ஸ்ஃபார்மர்கள் உள்ளன. ஒரு மின் விநியோக வட்டத்திற்கு தலா ஒரு வயர்மேன், ஒரு உதவியாளர் என, மொத்தம், 18 ஊழியர்கள் வேண்டும். ஆனால், நகரில் பிரிவில், 5 வயர்மேன் மட்டும் பணியில் உள்ளனர். ஒரு உதவியாளர் கூட இல்லாததால், வெளிஆட்களை வைத்து வேலை பார்த்து வருகின்றனர். கிராம பகுதியில் மழை, காற்று அடிக்கும் நாட்களில் பச்சை மரங்கள் மின் பாதையில் சிக்குவதால், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின் ஊழியர்கள் பற்றாக்குறையால், கம்பத்தில் ஏறி மின்தடைகளை சரி செய்ய முடியாத நிலையில், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.



நேற்று முன்தினம் மாலை, 3 மணிக்கு ஏற்பட்ட மின் தடை, இரவிலும் தொடர்ந்தது. இதனால், பனமரத்துப்பட்டி, காந்திநகர், கோம்பைக்காடு உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கியது. மின் தடையால் அவதிப்பட்ட மக்கள், பனமரத்துப்பட்டி மின் வாரிய அலுவலகத்திற்கு ஃபோன் செய்தனர். அலுவலகத்தில் ஃபோன் எடுக்கவே இல்லை. அதனால், மின் தடையை சரி செய்ய யாரிடம் முறையிடுவது என, பொதுமக்கள் தவித்தனர். பகல் நேரத்தில் மின் தடையை சரி செய்ய ஊழியர்கள் இல்லாததால், இரவில் வெகு நேரம் வரை, மின் தடை ஏற்பட்ட இடத்தை தேடி அலைந்த ஊழியர்கள் இரவு, 11 மணிக்கு மேல் மின் தடையை சரி செய்தனர். பனமரத்துப்பட்டி மின் வாரிய அலுவலகத்திற்கு தேவையான ஊழியர்களை நியமிக்க, உயர் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின் நுகர்வேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us