/உள்ளூர் செய்திகள்/சேலம்/வீணாகிறது அரசு ஒதுக்கிய நிதி மினி ஸ்டேடியம் பணி முடக்கம்வீணாகிறது அரசு ஒதுக்கிய நிதி மினி ஸ்டேடியம் பணி முடக்கம்
வீணாகிறது அரசு ஒதுக்கிய நிதி மினி ஸ்டேடியம் பணி முடக்கம்
வீணாகிறது அரசு ஒதுக்கிய நிதி மினி ஸ்டேடியம் பணி முடக்கம்
வீணாகிறது அரசு ஒதுக்கிய நிதி மினி ஸ்டேடியம் பணி முடக்கம்
ஆத்தூர் : ஆத்தூர் அருகே தாண்வராயபுரம் கிராமத்தில், கல்லாங்குத்து பகுதியில் 'மினி ஸ்டேடியம்' அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாண்டவராயபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை, தி.மு.க.,வை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள், 'டெண்டர்' எடுத்து செய்தனர். விளையாட்டு மைதானத்துக்கு சரியான இடம் தேர்வு செய்யவில்லை. கள்ளி செடிகளும், பெரிய பாறைகளும் அதிகளவில் உள்ளதால், பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் கேலரியும் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால், கான்கிரீட் மற்றும் இரும்பு கம்பிகள் பெயர்ந்து வருகிறது. பெரிய பாறைகளை சிலர் உடைத்து கட்டுக்கல்லாக கடத்தி செல்கின்றனர். எனவே, அரசு நிதியை வீணடித்த யூனியன் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


