/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு மருத்துவமனைக்கு புதிய கருவி வந்தாச்சுஅரசு மருத்துவமனைக்கு புதிய கருவி வந்தாச்சு
அரசு மருத்துவமனைக்கு புதிய கருவி வந்தாச்சு
அரசு மருத்துவமனைக்கு புதிய கருவி வந்தாச்சு
அரசு மருத்துவமனைக்கு புதிய கருவி வந்தாச்சு
ADDED : செப் 18, 2011 10:16 PM
பொள்ளாச்சி : ரத்தத்தில் 'ஹிமோகுளோபின்' கண்டறியும் புதிய 'ஹிமோகுளோபினோ
மீட்டர்' பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.தமிழக சுகாதார
மேம்பாட்டு திட்டம் சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு நான்கு
'ஹிமோகுளோபினோ மீட்டர்' வழங்கப்பட்டது.மருத்துவமனை குழந்தைகள் அறுவை
சிகிச்சை நிபுணர் கண்ணன் கூறியதாவது:பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வரும்
நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள 'ஹிமோகுளோபின்' கண்டறிவது மிகவும் அவசியமாக
கருதப்படுகிறது.
தினமும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் அறுவை
சிகிச்சைக்காகவும், பிரசவத்திற்காகவும் இங்கு ரத்தத்தில் உள்ள
'ஹிமோகுளோபின்' அளவை பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்ததில் உள்ள
'ஹிமோகுளோபின்' அளவு கண்டறியப்பட்டு ரத்த குறைபாடு இருக்கும் நோயாளிகளுக்கு
ரத்தம் வழங்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவ்வாறு 'ஹிமோகுளோபின்' அளவு
கண்டறிய தற்போது மருத்துவமனைக்கு புதிதாக 'ஹிமோகுளோபினோ மீட்டர்'
வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால், ரத்தத்தில் உள்ள 'ஹிமோகுளோபின்' அளவு
டாக்டர்களால் கண்டறிப்பட்டு வந்தது. இக்கருவியில் 'கெலோரிமீட்டர்' முறை
பயன்படுத்தப்படுகிறது. அதனால், இம்முறையில் கண்டறியப்படும் அளவினால்,
தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. இம்முறையில் குறைந்த நேரத்தில்
அதிக நோயாளிகளை பரிசோதனை செய்து கொள்ள முடியும். மருத்துவமனைக்கு
வழங்கப்பட்டுள்ள கருவி ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த
கருவிகள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.