ADDED : செப் 18, 2011 09:35 PM
சிதம்பரம்:காங்., கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில்
போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.
சிதம்பரம் நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட டாக்டர் செந்தில்வள்ளி
என்கிற மஞ்சுளா, உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் திவ்யா, மீனாசெல்வம்
ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர். மனுக்களை கடலூர் தெற்கு மாவட்ட தலைவர்
தலைவர் சச்சிதானந்தம் பெற்றார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு தேர்தல் கமிட்டி
உறுப்பினரும் முன்னாள் எம்.பி.,யுமான கலியபெருமாள், ஒருங்கிணைப்பாளர்
சிவசத்தியராஜன், சிதம்பரம் பாராளுமன்ற இளைஞர் காங்.,பொதுச் செயலர்
அமிர்தலிங்கம், மாவட்ட தொழிலாளர் காங்., தலைவர் ராஜராஜன், பொதுச் செயலர்
பாலசந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.