/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்ஸ்பெக்டரிடம் தகராறு மினி பஸ் டிரைவர் கைதுஇன்ஸ்பெக்டரிடம் தகராறு மினி பஸ் டிரைவர் கைது
இன்ஸ்பெக்டரிடம் தகராறு மினி பஸ் டிரைவர் கைது
இன்ஸ்பெக்டரிடம் தகராறு மினி பஸ் டிரைவர் கைது
இன்ஸ்பெக்டரிடம் தகராறு மினி பஸ் டிரைவர் கைது
ADDED : செப் 18, 2011 09:35 PM
திருப்பூர் : திருப்பூர் வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி; அவிநாசி
ரோடு - புஷ்பா சந்திப்பு பகுதியில் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும்
பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவ்வழியாக அதிவேகமாக வந்த மினி பஸ்சை மறித்த
பதி, டிரைவரிடம் ஆவணங்களை காட்டுமாறு கேட்டுள்ளார். ஆவணங்கள் இல்லாத
நிலையில் டிரைவர் முருகானந்தம், தகாத வார்த்தையில் பேசியுள்ளார். அங்கு
வந்த பஸ் உரிமையாளர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து
மிரட்டல் விடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவர்
முருகானந்தத்தை கைது செய்தனர்.