ADDED : செப் 18, 2011 01:08 AM
ப.வேலூர்: சொத்து பிரச்னை காரணமாக, சித்தப்பாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த, சேலத்தை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரை, போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ப.வேலூர் அருகே செங்கப்பள்ளியை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். அவரது அண்ணன் மகன் ஜெகநாதன் (56), சேலத்தில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இச்சூழலில், கடந்த சில வாரங்களுக்கு முன், அடியாட்களுடன் செங்கப்பள்ளி வந்த ஜெகநாதன், சித்தப்பா ஆறுமுகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதுகுறித்து ஆறுமுகம், ப.வேலூர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், ஹோட்டல் கடை உரிமையாளர் ஜெகநாதனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


