/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடையடைப்புபெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடையடைப்பு
பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடையடைப்பு
பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடையடைப்பு
பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடையடைப்பு
ADDED : செப் 18, 2011 01:05 AM
களியக்காவிளை:பெட்ரோல் விலைஉயர்வை கண்டித்து திருவனந்தபுரம் மாவட்டத்தில்
நடந்த ஹர்த்தாலில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திருவனந்தபுரத்தில் எஸ்.எப்.ஐ.,
டி.ஒய்.எப்.ஐ., அமைப்பினர் போராட்டம் நடத்தினர் சில இடங்களில் வன்முறை
வெடித்தது. போலீசார் தடியடி நடத்தினர். இதனை கண்டித்தும், பெட்ரோலின் விலை
உயர்வை கண்டித்தும் இடதுசாரி அமைப்பினர் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6
மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். திருவனந்தபுரம்,
நெய்யாற்றின்கரை பாறசாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் திறந்து இருந்த கடைகளில் கல்
வீசப்பட்டது. இதில் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் திறந்திருந்த
கடைகளும் அடைக்கப்பட்டது.
கேரளா அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்கள் மீது
பாறசாலை, காராளி, இஞ்சிவிளை பகுதிகளில் கற்கள் வீசப்பட்டது. இதனால் பஸ்
கண்ணாடி உடைந்தது திருவனந்தபுரம் செல்லும் பஸ் மீது கல்வீசப்பட்டதில் பஸ்
டிரைவர் நாகராஜனின் (38) வலது கண்ணில் காயம் ஏற்பட்டது. பஸ் கண்டக்டர்
ராஜேஷ்க்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மரம் ஏற்றி வந்த மினி
லாரி பாறசாலை போஸ்ட் ஆபீஸ் ஜங்சனில் வழிமறிக்கப்பட்டது. இதில் மூன்று
தொழிலாளர்கள் பயந்து ஒடிவிட்டனர். லாரியில் இருந்த இருவர் தாக்கப்பட்டனர்.
காயம் அடைந்த தொழிலாளர்கள் பாறசாலை ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று
வருகின்றனர். பாறசாலை, பூவார், விழிஞ்ஞம், பளுகல், கண்ணுமாமூடு, திருவனந்தபுரம்,
நெய்யாற்றின்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடைகள்
அடைக்கப்பட்டிருந்தது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்ட
அனைத்து வாகனங்களும் இயங்கவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்
பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்கள் களியக்காவிளை வரை சென்று
திரும்பியது. டவுன் பஸ்கள் மலையடி, மூவோட்டுக்கோணம், கண்ணுமாமூடு, ஊரம்பு,
கொல்லங்கோடு வழியாக இயக்கப்பட்டது. கேரளா செல்ல வேண்டிய லாரிகள்
களியக்காவிளையில் ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. கேரளா செல்ல
வேண்டிய பஸ் பயணிகள் களியக்காவிளை பஸ் ஸ்டாண்டில் தவித்தனர். பாறசாலை
மற்றும் குமரி மாவட்ட எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டிருந்தது.


