உள்ளாட்சி பதவிகள் ஏலம் போவதை தடுக்க ஏற்பாடு: மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு
உள்ளாட்சி பதவிகள் ஏலம் போவதை தடுக்க ஏற்பாடு: மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு
உள்ளாட்சி பதவிகள் ஏலம் போவதை தடுக்க ஏற்பாடு: மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு

உள்ளாட்சி பதவிகள் ஏலம் போவதை தடுக்கும் வகையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரங்களை அதிகளவில் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 962 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இதில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 618 ஊராட்சிகள் அடக்கம். கடந்த காலங்களில் நகர்புற உள்ளாட்சி பதவிகளை காட்டிலும், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகள், அப்பகுதிகளில் அதிகளவில் ஏலம் விடப்பட்டன. வசதி படைத்தவர்கள், பல லட்சம் ரூபாய் செலவழித்து இப்பதவிகளை போட்டி இல்லாமல் ஏலம் எடுத்து அமர்ந்து கொண்டனர். இதனால் நியாயமான தேர்தல் நடத்த முடியாமல் போனது. இதனை தடுக்க, இம்முறை மாநில தேர்தல் கமிஷன் புதிய ஏற்பாடுகள் செய்து வருகிறது. உள்ளாட்சி பதவிகள் ஏலம் போவதை தடுக்க வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்களை அதிகளவில் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் கமிஷன், தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
- எஸ்.அசோக்குமார் -