/உள்ளூர் செய்திகள்/சேலம்/பெரியார் பல்கலைக்கழகத்தில்"சிண்டிகேட்' உறுப்பினர் தேர்வுபெரியார் பல்கலைக்கழகத்தில்"சிண்டிகேட்' உறுப்பினர் தேர்வு
பெரியார் பல்கலைக்கழகத்தில்"சிண்டிகேட்' உறுப்பினர் தேர்வு
பெரியார் பல்கலைக்கழகத்தில்"சிண்டிகேட்' உறுப்பினர் தேர்வு
பெரியார் பல்கலைக்கழகத்தில்"சிண்டிகேட்' உறுப்பினர் தேர்வு
ADDED : செப் 17, 2011 03:22 AM
சேலம்: சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில், தேர்தல் மூலம் நான்கு
சிண்டிகேட் உறுப்பினர்கள் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.சேலம் பெரியார்
பல்கலைக்கழகத்தில், மொத்தம், 21 சிண்டிகேட் உறுப்பினர் பணியிடங்கள் உள்ளது.
இவற்றில், நான்கு பேர் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களால் தேர்வு
செய்யப்பட்டவர்களாகவும், நான்கு பேர் பல்கலைக்கழக ஆசிரியர்களாகவும், மூன்று
பேர் கவர்னர் நியமனம், இரண்டு பேர் அரசு நியமனம், பொது நியமனத்தில் ஒருவர்
உள்ளிட்டவர்கள் உள்ளனர்.
இதில், கல்லூரி முதல்வர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரசேகரன், கண்ணன்,
கல்லூரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாது, சிவக்குமார் ஆகிய நான்கு
சிண்டிகேட் உறுப்பினர்களின் பதவிக்காலம், கடந்த மாதத்துடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து, புதிய சிண்டிகேட் உறுப்பினர் பணியிடங்களை நியமிப்பதற்கான
தேர்தல் நேற்று நடந்தது.இத்தேர்தலில், சேலம் சவுடேஸ்வரி கல்லூரி முதல்வர்
சிங்காரம், சேலம் வைஸ்யா கல்லூரி முதல்வர் வெங்கடேசன், ஆசிரியர்கள் அருள்,
பழனியாண்டி ஆகியோர் சிண்டிகேட் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு, துணைவேந்தர் முத்துச்செழியன், ஆக்டா
அமைப்பின் மாநில தலைவர் ராஜா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.