/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காளம்பாளையத்தில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்காளம்பாளையத்தில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
காளம்பாளையத்தில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
காளம்பாளையத்தில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
காளம்பாளையத்தில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 16, 2011 11:26 PM
காரமடை : காளம்பாளையத்தில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
காரமடையை அடுத்த காளம்பாளையத்தில் ஸ்வர்ண வேலாயுத மலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. மிகவும் பழமையான கோவில்; கடந்த 1935ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்துள்ளது. ஊர் பொது மக்கள், ஆன்மிக வாதிகள் ஆகியோர் ஒன்றிணைந்து நன்கொடை பெற்று கோவிலை புதுப்பித்து கருவறை, மூலவர், விமானம், கன்னிக மூல கணபதி, ஸ்ரீவள்ளி, தெய்வானை ஆகிய தனி சன்னதிகளும், மகா மண்டபம், திருச்சுற்றுப்பிரகாரம் ஆகியவற்றை அமைத்துள்ளனர். விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதலும், முதல் கால யாக பூஜை துவங்கியது. கோவை கவுமாரமடாலய குமரகுருபர அடிகள் யாக பூஜையை துவக்கி வைத்தார். வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடந்தது. பேரூர் இளைய பட்டம் மருதாசல அடிகள், செஞ்சேரிமலை திருநாவுக்கரசர் திருமடம் முத்துசிவராமசாமி அடிகள் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் குழந்தை வேலாயுதசுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஞானசுவாமிநாத சிவாச்சாரியார், பாலசுப்பிரமணிய சிவச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.