/உள்ளூர் செய்திகள்/சேலம்/மின் வேலியில் தவறி விழுந்து விவசாயி உடல் கருகி படுகாயம்மின் வேலியில் தவறி விழுந்து விவசாயி உடல் கருகி படுகாயம்
மின் வேலியில் தவறி விழுந்து விவசாயி உடல் கருகி படுகாயம்
மின் வேலியில் தவறி விழுந்து விவசாயி உடல் கருகி படுகாயம்
மின் வேலியில் தவறி விழுந்து விவசாயி உடல் கருகி படுகாயம்
ADDED : செப் 14, 2011 01:22 AM
மேட்டூர்: விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக போட்டிருந்த மின்வேலியில், தவறி விழுந்ததால் உடல் கருகிய விவசாயி சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கொளத்தூர் அடுத்த சின்னமேட்டூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் மகன் விவசாய கூலி தொழிலாளி ராமன் (37).
இவரது மனைவி சின்னப்பொண்ணு. சின்ன பொண்ணு இரு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார்.ராமர் மட்டும் சின்னமேட்டூரில் தங்கி விவசாய கூலி வேலைக்கு சென்றார். சின்னமேட்டூர் அடுத்த தட்டான்காடு கல்லுமடுவு கொட்டாய் பகுதியில் உள்ள விவசாய நிலத்தை அதே பகுதியை சேர்ந்த தைலான் என்பவர் குத்தகைக்கு எடுத்து சோளம் சாகுபடி செய்துள்ளார்.சோளத்தை காட்டுபன்றிகள் சேதப்படுத்தாமல் இருக்க தைலான் சட்டவிரோதமாக கம்பிவேலி போட்டு, அதில் மின் இணைப்பும் கொடுத்திருந்ததாக தெரிகிறது. கடந்த 9ம் தேதி, இரவு 8 மணிக்கு கல்லுமடுவு கொட்டாய் பகுதியில் நடந்து சென்ற ராமன் நாய்கள் துரத்தியதால் திடீரென மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிவேலியில் தவறி விழுந்துள்ளார்.இதில், இடுப்புக்கு கீழே மின்சாரம் பாய்ந்து உடல் கருகிய ராமன் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைக்காக, மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொளத்தூர் எஸ்.ஐ., ஆனந்தவேலு தலைமறைவான தைலானை தேடி வருகிறார்.


