/உள்ளூர் செய்திகள்/சேலம்/ரயில்வே கோட்ட மரம் கடத்தல் மேலும் ஒரு ஊழியர் சஸ்பெண்ட்ரயில்வே கோட்ட மரம் கடத்தல் மேலும் ஒரு ஊழியர் சஸ்பெண்ட்
ரயில்வே கோட்ட மரம் கடத்தல் மேலும் ஒரு ஊழியர் சஸ்பெண்ட்
ரயில்வே கோட்ட மரம் கடத்தல் மேலும் ஒரு ஊழியர் சஸ்பெண்ட்
ரயில்வே கோட்ட மரம் கடத்தல் மேலும் ஒரு ஊழியர் சஸ்பெண்ட்
ADDED : செப் 14, 2011 01:22 AM
சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில், மரம் கடத்தல் தொடர்பான விவகாரத்தில், மேலும் ஒரு ரயில்வே ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சேலம் ரயில்வே கோட்டத்தில், கடந்த சில மாதங்களாக, ரயில்வேக்கு சொந்தமான மரங்களை மர்ம கும்பல் வெட்டி கடத்தியது.கடந்த மாதம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விருதாச்சலம் ரயில் வழித்தடத்தில் இருந்த வேம்பு, கருவேலம், புன்னை உள்ளிட்ட மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், மரக்கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.சேலம் ரயில் நிலையத்தில், கேங் மேஸ்திரிகளாக பணியாற்றும் வையாபுரி, சுப்ரமணி ஆகியோரின் உதவியுடன், ஐந்து பேர் கொண்ட கும்பல் மரக்கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூன்று நாட்களுக்கு முன், ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட ஏழுபேரையும், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வேம்பு, கருவேல் உள்ளிட்ட, 19 டன் மரங்களும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு டெம்போவும் பறிமுதல் செய்யப்பட்டது.கடத்தலில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் வையாபுரி, சுப்ரமணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், புக்ரவாரியை சேர்ந்த கேங் மேஸ்திரிகள் அய்யாசாமி, ராமலிங்கம் ஆகிய இருவரும் மரக்கடத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இரண்டு நாட்களுக்கு முன், அய்யாசாமியை, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்தனர். ராமலிங்கம் தலைமறைவாகியுள்ளார். அய்யாசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


