Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/நகை வழிப்பறி கும்பலை பிடிக்க திருச்சி, மதுரையில் போலீஸ் முகாம்

நகை வழிப்பறி கும்பலை பிடிக்க திருச்சி, மதுரையில் போலீஸ் முகாம்

நகை வழிப்பறி கும்பலை பிடிக்க திருச்சி, மதுரையில் போலீஸ் முகாம்

நகை வழிப்பறி கும்பலை பிடிக்க திருச்சி, மதுரையில் போலீஸ் முகாம்

ADDED : செப் 14, 2011 01:21 AM


Google News
சேலம்: சேலத்தில் ஒரே நாளில், ஆறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க, தனிப்படை போலீஸார் திருச்சி, மதுரைக்கு விரைந்துள்ளனர்.சேலம் மாநகரில், கடந்த 9ம் தேதி அடுத்தடுத்து ஆறு இடங்களில் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, 50 பவுன் நகைகள் வழிப்பறி செய்யப்பட்டது.

வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க, துணை கமிஷனர் சத்யபிரியா மேற்பார்வையில், மேற்கு உதவி கமிஷனர் (குற்றப்பிரிவு) மாணிக்கவேல், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், ரமேஷ், சூரியமூர்த்தி, செந்தில்குமார், ராம ஆண்டவர், எஸ்.ஐ., ஜெகதீசன், சிறப்பு எஸ்.ஐ., மணி உள்பட போலீஸார் கொண்ட குழுவினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.இதில், சேலம் அழகாபுரம், பெரியபுதூரில் வீடு எடுத்து தங்கி, வழிப்பறியில் ஈடுபட்ட, திருச்சி, காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்த முருகன் (23), அவரது மனைவி மதி (21) ஆகியோரை போலீஸார் சுற்றிவளைத்தனர். இருவரிடமும், தனித்தனியே நடத்தப்பட்ட விசாரணையில் 'திடுக்' தகவல் கிடைத்தது. முதலில், 500 பவுன் நகைகள் வழிப்பறி செய்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளது.இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இரண்டு ஆண்டுக்கும் மேலாக, முருகன் தலைமையிலான கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அனைவரும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். எனவே, வழக்கு மற்றும் கை செலவுக்காக வழிப்பறி செய்துள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, வழிப்பறி செய்வதும், போலீஸில் சிக்காமல் இருக்க, ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஊரையும், வீட்டையும் மாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வழிப்பறி செய்யும் நகைகளை தனியார் நிதி நிறுவனங்களில் விற்று, செலவு செய்துள்ளனர்.தமிழகத்தின் முக்கிய நகரங்களில் முகாமிட்டு, இதுவரை பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை வழிப்பறி செய்துள்ளனர். வழிப்பறி கும்பலோடு, சேலம், தாதகாபட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கும் தொடர்பு உள்ளது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கடந்த 9ம் தேதி, 50 பவுன் நகைகள் கொள்ளையடித்தை ஒப்பு கொண்டுள்ளார்.வழிப்பறி கும்பலை பிடிக்க, தனிப்படைபோலீஸார் திருச்சி, மதுரைக்கு விரைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us