
'இது தான் வளர்ச்சி...!'
தமிழக புதிய கவர்னர் ரோசய்யாவுக்கு, சென்னை கன்னிகா பரமேஸ்வரி அறக்கட்டளை சார்பில், பாராட்டு விழா நடந்தது.
மேலும், 'அப்போது ஓரளவு தமிழ் பேசுவேன். அதன் பின், என் வாழ்க்கை, ஆந்திராவிற்குள்ளேயே இருந்ததால், தமிழ் மறந்து விட்டது; விரைவில், கற்றுக் கொள்வேன். நம் சமுதாயத்தினர் இங்கு வியாபாரம் செய்து, பெரிய அளவில் வளர்ந்துள்ளதை பார்க்கும்போது, மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.இதைக்கேட்ட குறும்புக்கார வாலிபர் ஒருவர், 'மத்தவங்க வளர்ச்சியை விட, எண்ணெய் வியாபாரம் செய்தவர், கவர்னர் வரை உயர்ந்திருப்பது பெரிய வளர்ச்சியாச்சே...' என, 'கமென்ட்' அடித்தார்.
'புதுசு... ஆனா, உஷாரு...!'இயல், இசை, நாடக மன்றம் சார்பில், சென்னையில் நாட்டிய விழா நடக்க உள்ளது. இதற்கான நிருபர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. மன்றத் தலைவர் தேவா, 'அம்மா' என்ற வார்த்தையை உச்சரித்துவிட்டு யோசித்து, யோசித்து பதில் சொன்னார். 'நலிந்த கலைஞர்கள் பாதுகாக்கப்படுவார்கள், கிராமியக் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர, நல்ல வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். சென்னை, கோவை, மதுரை, சேலம் உட்பட முக்கிய நகரங்களில் இயல், இசை, நாடக, நாட்டிய விழாக்கள் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்' என்றார்.
அப்போது, நிருபர் ஒருவர், 'நீங்களும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி மாதிரியே நடத்தப் போகிறீர்களா?' எனக் கேட்டார். சிறிது நேரம் மவுனமாக சிரித்த தேவா, யோசனைக்குப் பின், 'அவங்க ரூட் வேற... எங்க ரூட் வேற... எங்கள் செயல்கள் வித்தியாசமாக இருக்கும்... போகப் போக புரிஞ்சுக்குவீங்க...' எனக் கூறி, நிலைமையை சமாளித்தார்.