/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பஸ் நிலையத்தில் தவித்த குழந்தை காப்பகத்தில் சேர்ப்புபஸ் நிலையத்தில் தவித்த குழந்தை காப்பகத்தில் சேர்ப்பு
பஸ் நிலையத்தில் தவித்த குழந்தை காப்பகத்தில் சேர்ப்பு
பஸ் நிலையத்தில் தவித்த குழந்தை காப்பகத்தில் சேர்ப்பு
பஸ் நிலையத்தில் தவித்த குழந்தை காப்பகத்தில் சேர்ப்பு
ADDED : செப் 13, 2011 12:44 AM
கடலூர் : விருத்தாசலம் பஸ் நிலையத்தில் தவித்த ஒன்னரை வயது ஆண் குழந்தை, அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.
சேலத்திலிருந்து கடலூர் வந்த பஸ்சில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஒன்னரை வயது ஆண் குழந்தையுடன் பயணம் செய்தார். வேப்பூர் பஸ் நிலையத்தில் மாலை 5 மணிக்கு பஸ் வந்து சேர்ந்தது.அப்போது அந்த பஸ்சில் இரண்டு ஆசிரியர்கள் பயணம் செய்தனர். விருத்தாசலம் பஸ் நிலையம் வந்த போது ஆண் குழந்தையை வைத்திருந்த பெண், கழிவறைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு குழந்தையை ஆசிரியர்களிடம் விட்டுச் சென்றார். ஒரு மணி நேரம் கடந்தும் அப் பெண் வராததால் பதட்டம் அடைந்த ஆசிரியர்கள், பஸ் நிலையம் முழுவதும் போலீசார் துணையோடு தேடினர். ஆனால் அவரை காணவில்லை. இதையடுத்து அக்குழந்தையை விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கடந்த 2 நாட்களாக குழந்தையைத் தேடி யாரும் வராததால், அரசு குழந்தைகள் காப்பகத்தில் விட முடிவு செய்தனர். அதன்படி குழந்தையை கலெக்டர் அமுதவல்லியிடம் ஒப்படைத்து, பின்னர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.