/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/அன்னதான திட்டத்துக்கு நன்கொடை : தன்னார்வ அமைப்புக்கு அமைச்சர் வேண்டுகோள்அன்னதான திட்டத்துக்கு நன்கொடை : தன்னார்வ அமைப்புக்கு அமைச்சர் வேண்டுகோள்
அன்னதான திட்டத்துக்கு நன்கொடை : தன்னார்வ அமைப்புக்கு அமைச்சர் வேண்டுகோள்
அன்னதான திட்டத்துக்கு நன்கொடை : தன்னார்வ அமைப்புக்கு அமைச்சர் வேண்டுகோள்
அன்னதான திட்டத்துக்கு நன்கொடை : தன்னார்வ அமைப்புக்கு அமைச்சர் வேண்டுகோள்
ADDED : செப் 13, 2011 12:38 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட திருக்கோவில்களில் துவங்கப்பட்டுள்ள அன்னதான திட்டத்துக்கு நன்கொடைகள் வழங்குமாறு தன்னார்வ அமைப்புகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த திருமணஞ்சேரி பரிமளேஸ்வரர் கோவிலில் அரசு சார்பில் அன்னதான திட்டத்தை துவக்கிவைத்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: ஏழை, எளியோர், ஆதரவற்றோர், முதியோர் மற்றும் பக்தர்களின் பசியை போக்க முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின்போது திருக்கோவில்களில் அன்னதான திட்டம் துவக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 14 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பேரையூர் நாகநாத சுவாமி திருக்கோவில், மண்டையூர் பாலதண்டாயுதபாணி திருக்கோவில், திருமணஞ்சேரி பரிமளேஸ்வர் திருக்கோவில் என நான்கு கோவில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் மேலும் பல லட்சம் பேர் பயன்பெற உள்ளனர். திருக்கோவில்கள் அன்னதான திட்டம் சிறக்க தானாக முன்வந்து நன்கொடைகள் வழங்க தன்னார்வ அமைப்புகள் முன்வரவேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில், கலெக்டர் மகேஸ்வரி, எம்.எல்.ஏ., முத்துக்குமரன், அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பரிதி, உதவி கமிஷனர் அம்பலவாணன், அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ராமையா, நகரச் செயலாளர் பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.