ADDED : செப் 11, 2011 11:04 PM
திண்டுக்கல் : திண்டுக்கல், ஏ.எம்.சி., ரோட்டில், புதிதாக கட்டப்பட்ட ஆர்.கே.இருதய சிகிச்சை மையம், துவக்க விழா நடந்தது.
ஆஸ்பத்திரி நிறுவனர் எஸ்.ராமச்சந்திரன் வரவேற்றார். வர்த்தக சங்க துணைத்தலைவர் ஜி.சுந்தரராஜன், புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். சக்திவிநாயகர் பஸ் உரிமையாளர் ராஜாங்கம் குத்துவிளக்கு ஏற்றினார். மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ஜெயபால், முன்னாள் பேராசிரியர் அமுதன், இருதய சிகிச்சைக்கான சிறப்பு டாக்டர் எஸ்.ஆர். வீரமணி, டாக்டர்கள் மதிச்செல்வன், மைதிலிசின்னராஜ், லோகநாதன், விஜயாலோகநாதன், ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்துச்சாமி, தொழில் அதிபர்கள் மருதநாயகம், கே.ஏ.ஆர். முகைதீன், பொறியாளர் முத்துப்பாண்டி, பாட்ஷா, நாதன் பெயின்ட்ஸ் சண்முகநாதன், அனுகூல விநாயகர் எஜென்சி உரிமையாளர் தங்கராஜ், திண்டுக்கல் அயர்ன் ஹார்டுவேர்ஸ் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆஸ்பத்திரி நிர்வாகிகள் எஸ்.ஆர்.சிவப்பிரகாசம், எஸ்.ஆர்.பாலமுருகன் நன்றி கூறினர்.