Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு மறுவாழ்வு உதவிகள்

இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு மறுவாழ்வு உதவிகள்

இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு மறுவாழ்வு உதவிகள்

இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு மறுவாழ்வு உதவிகள்

ADDED : செப் 11, 2011 12:43 AM


Google News

திருநெல்வேலி : இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளி வந்த சிறுபான்மையின மக்களின் மறுவாழ்வுக்கு உதவிகள் செய்யப்படுகிறது.

சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் மற்றும் உடல், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்கு வழி வகை செய்யும் வகையில் சிறு வணிகம் செய்து மறுவாழ்வு பெற நிதி உதவியாக அதிகபட்சம் ஒரு பயனாளிக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இனக் கலவரங்களால் உடல் உழைப்பு செய்ய இயலாத வகையில் ஊனமுற்றிருந்தால் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவராக அல்லது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பெருங் குற்றங்களாக கருதப்படும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாதவராகவும், முதன் முறையாக சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து மீண்டவராக இருக்க வேண்டும். உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவராக இருப்பின் மாவட்ட அரசு மருத்துவரிடம் பரிசோதித்து அதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பாக தாசில்தாரிடமிருந்து பொருள் இழப்பீட்டு சான்று சமர்ப்பிக்க வேண்டும். இந்திய தண்டனை சட்டம் விதிகளின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் செய்திருப்போர் மற்றும் தண்டனை பெற்றிருப்போரின் ஆண்டு வருமானம் நகர்ப்புறங்களில் வசிப்போருக்கு 36 ஆயிரத்திற்கு மிகாமலும், கிராமப்புறங்களில் வசிப்போருக்கு 24 ஆயிரத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். சிறு தண்டனை அனுபவித்து மறுவாழ்வு நிதி கோருபவராக இருந்தால் தடை செய்யப்பட்ட எந்த ஒரு அமைப்பின் உறுப்பினராகவோ, முனைப்பான பங்கேற்பாளராகவோ இருக்க கூடாது. விண்ணப்பதாரர் மீது எந்த ஒரு குற்ற வழக்கும் நிலுவையில் இருக்க கூடாது. விண்ணப்பதாரர் முதன் முறையாக சிறு தண்டனைக்காக சிறை சென்று வந்தவராகவும், தமிழகத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்கள் இழப்பின் அளவை குறிப்பிட்டு அதற்கான சான்று ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு முழு விபரங்கள் மற்றும் உரிய சான்று ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us