/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வார்டுகளில் பெயர் மாற்றத்தால் குழப்பம்நெல்லை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வார்டுகளில் பெயர் மாற்றத்தால் குழப்பம்
நெல்லை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வார்டுகளில் பெயர் மாற்றத்தால் குழப்பம்
நெல்லை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வார்டுகளில் பெயர் மாற்றத்தால் குழப்பம்
நெல்லை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வார்டுகளில் பெயர் மாற்றத்தால் குழப்பம்
ADDED : செப் 11, 2011 12:43 AM
திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நெல்லை மாநகராட்சி 18வது வார்டில் குடியிருந்து வரும் வாக்காளர்கள் பலரது பெயர்கள் 17வது வார்டு மற்றும் 19வது வார்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள பாகம் எண் 105ல் உள்ள வாக்காளர்கள் பெயர் 17வது வார்டு சிவனடியார்குளத்தில் உள்ளது. இப்பாகம் எண்ணில் உள்ள பல பெயர்கள் அப்துல் ரகுமான் முதலாளி நகர், போத்தீஸ் நகரிலும் உள்ளது. பாகம் எண் 106ல் 18வது வார்டில் உள்ள லட்சுமி நகர் மற்றும் திருவள்ளுவர் தெரு வாக்காளர்கள் 50 பேர் 19வது வார்டான தியாகராஜ நகர் 2வது நடுத் தெருவில் உள்ளது. இதனால் வாக்காளர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக 18வது வட்ட செயலாளர் வேலுதாஸ் கூறும் போது, ''மாநகராட்சி தேர்தல் என்பதால் வாக்காளர்களின் ஒவ்வொரு ஓட்டும் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவமாகும். வெற்றி தோல்விகளை இந்த ஓட்டுகள் நிர்ணயம் செய்யும். வாக்காளர் பட்டியல் குழப்பம் தொடர்பாக ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதனை பரிசீலனை செய்து 19வது மற்றும் 17வது வார்டுகளில் உள்ள மாறியுள்ள வாக்காளர்கள் பெயர்களை 18வது வார்டிலேயே சேர்த்து புதிய திருத்த வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்'' என்றார்.