ADDED : செப் 11, 2011 12:43 AM
பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வி.எல்.பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வி.எல்.பாலிடெக்னிக் கல்லூரியும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் லயன்ஸ் சங்கமும் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர். முகாமிற்கு கல்லூரி இயக்குநர் லெட்சுமி ஆனந்த் தலைமை வகித்தார். முதலாம் ஆண்டு துறை தலைவர்கள் ரவிந்திரன், துரை சங்கர் முன்னிலை வகித்தனர். கல்லூரி ஆலோசகர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட லயன்ஸ் தலைவர் இளங்கோ தொகுப்புரையாற்றினார்.
முதுநிலை விரிவுரையாளர்கள் யோகலிங்கம், மதுநிதி, முத்துபாலா ரத்ததானத்தை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். டாக்டர்கள் தேவிகற்பூரநாயகி, சபீராபீவி ரத்த பரிசோதனை செய்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் லயன்ஸ் சங்க தலைவர் சுப்பிரமணியன், துறைத் தலைவர் மணிராஜ் ரத்ததானம் செய்த உடற்கல்வி இயக்குநர் இலங்காமணி உட்பட 48 மாணவர்களுக்கு பழங்கள் வழங்கினர். விரிவுரையாளர்கள் சுரேஷ், சிவனேஸ்வரன் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, லயன்ஸ் பொருளாளர் சுப்பையா பாண்டியன் நன்றி கூறினர்.