/உள்ளூர் செய்திகள்/சென்னை/"கிரேட்டர் சென்னை'யில் 200 புதிய வார்டுகளுக்கு அங்கீகாரம் : மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்"கிரேட்டர் சென்னை'யில் 200 புதிய வார்டுகளுக்கு அங்கீகாரம் : மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
"கிரேட்டர் சென்னை'யில் 200 புதிய வார்டுகளுக்கு அங்கீகாரம் : மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
"கிரேட்டர் சென்னை'யில் 200 புதிய வார்டுகளுக்கு அங்கீகாரம் : மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
"கிரேட்டர் சென்னை'யில் 200 புதிய வார்டுகளுக்கு அங்கீகாரம் : மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
சென்னை : சென்னை மாநகராட்சி, 'கிரேட்டர் சென்னை'யாக உருவாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதனுடைய புதிய வார்டுகள், மண்டலங்கள் ஆகியவற்றிற்கு மாநகராட்சி அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த, 15 மண்டலங்களும் நிர்வாக வசதிக்காக, சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மத்தி ஆகிய மூன்று பெரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, இம்மண்டலங்களுக்கு, இணை ஆணையர் அல்லது கூடுதல் அணையர் பொறுப்பில் அலுவலர்கள் நியமிக்க, மாநகராட்சி முடிவு செய்து, இதற்கான தீர்மானமும், நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி வார்டுகளில் அமைக்கப்படவுள்ள ஓட்டுச் சாவடிகள் மற்றும் வார்டுகளில், யார் யார் போட்டியிட முடியும் என்ற தீர்மானமும், நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகராட்சியில் மொத்தமுள்ள, 200 வார்டுகளில், 1,384 ஆண் ஓட்டு சாவடிகளும், 1,384 பெண் ஓட்டு சாவடிகளும், 2,109 பொது வாக்குச் சாவடிகளும் என, 4,877 ஓட்டு சாவடிகளும் அமைக்கப்படுகின்றன. இதற்கு மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள், மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் வெளியிடுவதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார். வார்டு ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு: 200 வார்டுகளில், பெண்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் ஒதுக்கப்பட்டவை ஒரு பகுதிலேயே குவிந்திருப்பதாகவும், அதை பராவலாக்க வேண்டும் என்றும், அனைத்து கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சட்டசபை தொகுதி அடிப்படையில், வார்டுகளை போட்டியாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.