Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குடந்தை அருகே திருமண மண்டபத்தில் 6 பவுன் நகைகள், கேமரா, வாட்ச் திருட்டு

குடந்தை அருகே திருமண மண்டபத்தில் 6 பவுன் நகைகள், கேமரா, வாட்ச் திருட்டு

குடந்தை அருகே திருமண மண்டபத்தில் 6 பவுன் நகைகள், கேமரா, வாட்ச் திருட்டு

குடந்தை அருகே திருமண மண்டபத்தில் 6 பவுன் நகைகள், கேமரா, வாட்ச் திருட்டு

ADDED : செப் 09, 2011 01:58 AM


Google News
கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருமண மண்டபத்தில் மணமக்களுக்கு அணிவிப்பதற்காக வைத்திருந்த ஆறு பவுன் நகை உள்ளிட்ட பொருட்கள் திருட்டுப்போனது.

கும்பகோணத்தை அடுத்த அண்ணலக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் செறுகடம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள் சுபிக்ஷாவிற்கும் நேற்று அண்ணலக்ரஹாரம் காளிமுத்து நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்காக சுபிக்ஷாவின் அக்காள் கணவர் மதுரையைச் சேர்ந்த செந்தில்மாறன் என்பவர் திருமணத்திற்கு முதல்நாளே குடும்பத்தினரோடு வந்திருந்தார். செந்தில்மாறன் மற்றும் சில உறவினர்கள் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு படுத்திருந்தனர். அப்போது, மணப்பெண்ணுக்கு அணிவிப்பதற்காக செயின், தோடு, மாட்டில், தாலிகுண்டு உள்ளிட்ட நகைகளும், மணமகனுக்கு வழங்குவதற்காக செயின், மோதிரம், பிரேஸ்லட் உள்ளிட்ட மொத்தம் ஆறு பவுன் நகைகளும் ஒரு பையில் வைத்திருந்தனர். அதே பையில் கேமரா, வாட்ச் உள்ளிட்ட விலைஉயர்ந்த பொருட்கள் என மொத்தம் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அந்த பையில் இருந்தது. நேற்று காலை தூங்கி எழுந்து மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்காக பையை தேடியபோது நகைகள் இருந்த பை காணாமல் போனது தெரியவந்தது. மண்டபம் முழுவதும் உறவினர்கள் தேடியும் நகைப்பை காணவில்லை. இதனால் மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் திருமணத்தை முடித்துவிட்டு, போலீஸில் புகார் செய்யலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஒருவழியாக மணமகன் வீட்டாரிடம் நடந்ததை தெரிவித்து அவர்களும் ஒப்புகொண்டதை அடுத்து திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் தான் நகையை திருடியிருக்கலாம். யார்மீதாவது சந்தேகப்பட்டு, அதனால் ஏதேனும் பிரச்சினை ஏற்படலாம் என கருதிய மணமக்கள் வீட்டார் திருமணம் முடிந்ததும் பட்டீஸ்வரம் போலீஸில் புகார் செய்தனர். பட்டீஸ்வரம் போலீஸ் எஸ்.ஐ., ரேகாராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us