ADDED : செப் 09, 2011 01:30 AM
நாமக்கல்: நாமக்கல், நல்லிபாளையம் கொங்குநாடு மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தின விழா நடந்தது.பள்ளித் தலைவர் முத்துசாமி
தலைமை வகித்தார்.
நிறுவனர் ராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்களுக்கு, பின்னோக்கி நடத்தல், அதிர்ஷ்ட எண்
விளையாட்டு, ஓவியப் பெண்ணுக்கு பொட்டு வைத்தல் போன்ற விளையாட்டுப்
போட்டிகள் நடத்தப்பட்டன.வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது. மேலும், ஆசிரியர்களுக்கு புது ஆடைகள் வழங்கப்பட்டன. பள்ளி
நிறுவனர் ராஜேந்திரன், துணைத் தலைவர் நல்லையன், செயலாளர் வாசுதேவன், இணைச்
செயலாளர் லோகநாதன், பொருளாளர் அப்புசாமி, இயக்குனர்கள் ராமசாமி, ராஜா
மற்றும் முதல்வர்கள் பாஸ்கர், சுமதி ஆகியோர் பங்கேற்றனர்.


