Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஆஸ்திரேலியா கால்பந்து விளையாட்டு அறிமுகப்படுத்தும் விழா

ஆஸ்திரேலியா கால்பந்து விளையாட்டு அறிமுகப்படுத்தும் விழா

ஆஸ்திரேலியா கால்பந்து விளையாட்டு அறிமுகப்படுத்தும் விழா

ஆஸ்திரேலியா கால்பந்து விளையாட்டு அறிமுகப்படுத்தும் விழா

ADDED : செப் 09, 2011 12:53 AM


Google News

கோவில்பட்டி : கோவில்பட்டி சிடார் நிறுவனமும் இங்கிலாந்து நாட்டு ஜிசிஎஸ் அமைப்பும் இணைந்து ஆஸ்திரேலியா கால்பந்து விளையாட்டு அறிமுகப்படுத்தும் விழாவை நடத்தியது.

கோவில்பட்டி சிடார் நிறுவனம் மற்றும் இங்கிலாந்து குளோபல் கம்யூனிட்டி ஸ்போர்ட்ஸ் அமைப்பும் இணைந்து ஆஸி.புட்பால் விளையாட்டை பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்தும் விழா கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் சக்திவேல்முருகன் தலைமை வகித்தார். சிடார் நிர்வாக அறங்காவலர் சின்னராஜ் ஜோசப் மற்றும் இயக்குனர் தெரசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குழந்தைகள் உரிமை கண்காணிப்பு குழு உறுப்பினர் தமிழரசன் வரவேற்றார். ஜிசிஎஸ் நிறுவனர்களான ரிக் ஸ்ரவ்டர் மற்றும் டாரில் ஹம்புல் ஆகியோர் ஆஸி.புட்பால் விளையாட்டை துவக்கி வைத்து பேசியதாவது, ஆஸி.புட்பால் விளையாட்டை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதின் நோக்கம் அடிப்படையில் குழந்தைகளும், இளைஞர்களும் விளையாட்டில் ஆர்வம் ஏற்படுத்திக் கொள்வதற்காகவே. இந்த விளையாட்டிற்கான பயிற்சி புத்தகத்தை இங்கிலாந்திலுள்ள குழந்தைகளே எழுதியுள்ளனர். இதே போன்று கபடி போன்ற இந்திய பாரம்பரிய விளையாட்டுகளுக்கான பயிற்சி ஏடுகளை தமிழக குழந்தைகளும் அவர்களாகவே எழுத முன் வரவேண்டும். இந்திய பாரம்பரிய விளையாட்டுக்களை இங்கிலாந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறினர். இங்கிலாந்து ஜிசிஎஸ் திட்டத்தின் மூலமாக விளையாட்டை பயன்படுத்தி இருநாடுகளிடையேயும் குழந்தைகள் மூலமாக கலாச்சார பரிவர்த்தனை ஆர்வம் உருவாக்க போவதாகவும், இதற்காக நாடு முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இணைத்து அரசை சந்திக்க போவதாகவும் கூறினர். இவ்விழாவில் மகாசக்தி சுயஉதவி குழு கூட்டமைப்பு உறுப்பினர்கள், சிடார் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us