/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/காணாமல் போன திருடர் கொலை: மூன்று பேர் கைதுகாணாமல் போன திருடர் கொலை: மூன்று பேர் கைது
காணாமல் போன திருடர் கொலை: மூன்று பேர் கைது
காணாமல் போன திருடர் கொலை: மூன்று பேர் கைது
காணாமல் போன திருடர் கொலை: மூன்று பேர் கைது
ADDED : செப் 07, 2011 10:53 PM
முதுகுளத்தூர் : கீழத்தூவலை சேர்ந்த முனியசாமி, 21, சிறு வயதிலிருந்தே பல ஊர்களில் திருட்டு கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தவர்.
இவர் கடந்த ஜூலை மாதத்திலிருந்து காணாமல் போனார். தந்தை கிருஷ்ணன் புகார்படி கீழத்தூவல் போலீசார் விசாரித்தனர். இதில் 2010ல் கீழத்தூவலில் இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள், முனியசாமியை ஆடு திருட அழைத்து சென்றனர். இவர்களுடன் சென்ற முனியசாமியை வீரசோழன் நத்தகுளம் அருகே ஆற்றில் துண்டு, துண்டாக வெட்டி புதைத்தனர். இதுதொடர்பாக கீழத்தூவல் அய்யனார், சூரப்புலி, சிவக்குமார் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.