/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநில அளவிலான செஸ் சென்னை வீரர் முதலிடம்மாநில அளவிலான செஸ் சென்னை வீரர் முதலிடம்
மாநில அளவிலான செஸ் சென்னை வீரர் முதலிடம்
மாநில அளவிலான செஸ் சென்னை வீரர் முதலிடம்
மாநில அளவிலான செஸ் சென்னை வீரர் முதலிடம்
ADDED : செப் 07, 2011 12:04 AM
அனுப்பர்பாளையம் : திருப்பூரில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில், சென்னையை சேர்ந்த குமரன் முதலிடம் பெற்றார்.காந்திநகர் ரோட்டரி கிளப், திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப், லெஜண்ட் செஸ் அகாடமி இணைந்து மாநில அளவிலான செஸ் போட்டியை நடத்தின. திருப்பூர், கோவை, சென்னை. ஈரோடு, திருச்சி, மதுரையை சேர்ந்த 225 வீரர்கள் பங்கேற்றனர். போட்டி 10 சுற்றுகளாக நடத்தப்பட்டது. சென்னையை சேர்ந்த குமரன் முதலிடம், சாய் விஸ்வேஸ் இரண்டாமிடம், சேலத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மூன்றாமிடம் பெற்றனர். முதல் பரிசாக 15 ஆயிரம்; இரண்டாம் பரிசாக 10 ஆயிரம்; மூன்றாம் பரிசாக ஏழாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
பரிசுகளை 'டீமா' தலைவர் முத்துரத்தினம், ரோட்டரி முன்னாள் கவர்னர் நாராயணசாமி வழங்கினர். திட்ட இயக்குனர் முருகானந்தன், காந்திநகர் ரோட்டரி கிளப் தலைவர் ரத்தினசாமி, திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப் தலைவர் ராஜேஸ், லெஜண்ட் செஸ் அகாடமி தலைவர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.