/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/முதுகுளத்தூர் பஜாரில் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பு: சிக்கலில் போக்குவரத்துமுதுகுளத்தூர் பஜாரில் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பு: சிக்கலில் போக்குவரத்து
முதுகுளத்தூர் பஜாரில் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பு: சிக்கலில் போக்குவரத்து
முதுகுளத்தூர் பஜாரில் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பு: சிக்கலில் போக்குவரத்து
முதுகுளத்தூர் பஜாரில் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பு: சிக்கலில் போக்குவரத்து
ADDED : செப் 06, 2011 11:52 PM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பஜாரில் ரோட்டையொட்டி விரிவாக்கம் செய்யப்பட்ட கடைகள் மற்றும் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூர் பஜார் ரோடு குறுகலானது.
சரக்கு வாகனங்கள் வந்தாலே இடியாப்ப சிக்கலில் வாகனங்கள் தவிக்கின்றன. கடந்தாண்டில் ரோட்டையொட்டி விரிவாக்கம் செய்யப்பட்ட கடைகள், தரைக்கடைகள் ஆக்கிரமித்துள்ளன. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. பாதசாரிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து 'தினமலர்' இதழில் செய்தி வெளியிடப்பட்டதன் விளைவாக ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டன. சில நாள்களிலேயே மீண்டும் ரோடு ஆக்கிரமிப்பிற்கு ஆளாகி பஜார் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு மீண்டும் ஏற்படாமல் இருக்க பேரூராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.