உண்மையை பேசினால் தி.மு.க.,வினரால் தாங்க முடியாது: பண்ருட்டி ராமச்சந்திரன்
உண்மையை பேசினால் தி.மு.க.,வினரால் தாங்க முடியாது: பண்ருட்டி ராமச்சந்திரன்
உண்மையை பேசினால் தி.மு.க.,வினரால் தாங்க முடியாது: பண்ருட்டி ராமச்சந்திரன்

சென்னை: ''உண்மையைப் பேசினால் தாங்க முடியாது என்பதால் தான், தி.மு.க.
சட்டசபையில், விதி எண் 110ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த விளையாட்டுத் துறை மேம்பாடு குறித்த அறிக்கையைப் பாராட்டி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசியதாவது:
கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்: இந்தியா போன்ற பெரிய நாடுகள், விளையாட்டுப் போட்டிகளில் பெரிய அளவில் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. தமிழக வீரர்கள் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, முதல்வர் அறிவித்த திட்டங்கள் பாராட்டுக்குரியன.
ஜவாஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சி: உலக விளையாட்டு அரங்கில், பல்வேறு விளையாட்டுகளில் தமிழர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தொலைநோக்குப் பார்வையுடன், சிறப்பான திட்டத்தை அறிவித்தது வரவேற்கத்தக்கது.
கலையரசன்-பா.ம.க.,: இந்தியா 70 சதவீதம் கிராமங்களைக் கொண்ட நாடு. கிராமத்திலுள்ள இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கும் நிலையில், அறிவித்த திட்டங்களை பா.ம.க., வரவேற்கிறது.
குணசேகரன்-இந்திய கம்யூனிஸ்ட்: ஆளும் வளரணும், அறிவும் வளரணும் என, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டு எழுதியது போல், ஆள் வளருவதற்கு விளையாட்டுத் துறையையும், அறிவு வளருவதற்கு கல்வித் துறையையும் முதல்வர் இரண்டு கண்களாக பாவித்து, சிறப்பான திட்டங்களைத் தந்துள்ளார்.
சவுந்தரராஜன்- மார்க்சிஸ்ட்: தெற்காசிய, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செஸ், கேரம், டேபிள் டென்னிஸ், நீச்சல் போன்ற விளையாட்டுகளில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் முத்திரை பதிக்கப் போவதற்கான பிரகாசமான வாய்ப்பு தெரிகிறது.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்: வாய்ப்புத் தரும் போது தான், திறமை வெளிப்படுகிறது. வேறு துறைகளுக்கு சிபாரிசு, இட ஒதுக்கீடு உள்ளது. விளையாட்டுத் துறையில் மட்டும் யாருக்குத் தகுதி இருக்கிறதோ, அவர்களால் தான் வெற்றி பெற முடியும். இத்துறையில் வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும். போட்டி இருக்கலாம்; பொறாமை இருக்கக் கூடாது. அமைச்சர் சுப்பிரமணியன் உண்மையைத் தான் கூறினார். திகார் சிறையில், கனிமொழி இருக்கிறார் என்பது உண்மை. இப்படி உண்மையைப் பேசினால் தாங்க முடியாது என்பதாலும், அப்படியே உள்ளே இருந்தால், அவர்களின் தலைவர் ஏன் சும்மா இருந்தாய் என கோபித்துக் கொள்வார் என்பதாலும், தி.மு.க., உறுப்பினர்கள் வெளியேறி விட்டனர். இவ்வாறு, கட்சித் தலைவர்கள் பேசினர்.