/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை.,பள்ளி, கல்லூரியில் ஆசிரியர் தின விழாபாளை.,பள்ளி, கல்லூரியில் ஆசிரியர் தின விழா
பாளை.,பள்ளி, கல்லூரியில் ஆசிரியர் தின விழா
பாளை.,பள்ளி, கல்லூரியில் ஆசிரியர் தின விழா
பாளை.,பள்ளி, கல்லூரியில் ஆசிரியர் தின விழா
திருநெல்வேலி : பாளை,.யில் உள்ள தனியார் பள்ளி,கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி : பாளை., இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் நடந்த ஆசிரியர் விழாவில் பேராசிரியைகள் ராதிகா, ராஜேஸ்வரி திருவிளக்கு ஏற்றினர். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கல்லூரியின் செயலர் அமலா ரபேல் சமுதாயத்தில் ஆசிரியர்களின் பங்கு குறித்தும், கல்லூரி முதல்வர் நிர்மலா சுந்தர்ராஜ், ஆசிரிய மாணவர்கள் எவ்வாறு ஆசிரியருக்கு உரிய தகுதியினை உயர்த்தி கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேசினர். விழாவில் பேராசிரியர்கள், ஆசிரிய மாணவிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து ஆசிரிய மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை ஆசிரிய மாணவி சுதா தொகுத்து வழங்கினார். இதில் ஆசிரிய மாணவிகள், பேராசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரிய மாணவி சியாமளா நன்றி கூறினார்.