/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பண்ருட்டியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பயிற்சி முகாம்பண்ருட்டியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பயிற்சி முகாம்
பண்ருட்டியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பயிற்சி முகாம்
பண்ருட்டியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பயிற்சி முகாம்
பண்ருட்டியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பயிற்சி முகாம்
ADDED : செப் 05, 2011 11:45 PM
பண்ருட்டி: பண்ருட்டி, நெய்வேலி தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
தாசில்தார் அனந்தராம் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் அருணாசலம் முன்னிலை வகித்தார். கடலூர் சப் கலெக்டர் கிரன்குராலா துவக்கி வைத்துப் பேசினார். முகாமில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது, வாக்காளர் பட்டியலில் எழுத்துப் பிழைகள், இருமுறை பதிவுகள், பாகத்தின் தலைப்பக்கம், புகைப்படங்கள் சேகரித்தல், வாக்காளர்களின் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி சேகரித்தல் ஆகியவை குறித்து ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், நகராட்சி உதவியாளர்கள், வி.ஏ.ஓ.,க் கள், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.