ADDED : செப் 04, 2011 11:12 PM
பண்ருட்டி : கார் திடீரென தீப்பிடித்த எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ். இவர் நேற்று காலை 7.30 மணியளவில் தனது போர்டு ஐகான் காரில் பண்ருட்டி சென்று விட்டு பின் பணிக்கன்குப்பம் சென்று கொண்டிருந்தார். சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிக்கன்குப்பம் கிராமத்திற்கு திரும்பும் போது கார் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. உடன் ஆண்ட்ரூஸ் காரை நிறுத்தி விட்டு பண்ருட்டி தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் பண்ருட்டி தீயணைப்பு அலுவலர் சீனுவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். காரின் இன்ஜின் உள்ளிட்ட பாகங்கள் முற்றிலும் எரிந்தன.