/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வேளாண்மை அலுவலர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம்வேளாண்மை அலுவலர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம்
வேளாண்மை அலுவலர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம்
வேளாண்மை அலுவலர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம்
வேளாண்மை அலுவலர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம்
ADDED : செப் 04, 2011 11:12 PM
கடலூர் : தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் மற்றும் வேளாண் காவலன் பத்திரிகை ஆசிரியர் சண்முகத்திற்கு பணி ஓய்வு பாராட்டு விழா கடலூரில் நடந்தது.
மாவட்டத் தலைவர் குமார் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் பிச்சைமணி, தணிக்கையாளர் காத்தையன் முன்னிலை வகித்தனர். இணைச் செயலர் துரை அருளானந்தம், மகளிர் அணிச் செயலர் சர்மிளா சிறப்புரையாற்றினார். பொதுச் செயலர் கண்ணுசாமி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சிறு, குறு விவசாயிகளின் உற்பத்தியை பெருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மண் ஆய்வு கட்டணத்தை ஆத்மா திட்டத்தின் கீழ் அரசே இலவசமாக செய்து தர வேண்டும். உதவி அலுவலர்களுக்கு கிடங்கு பணி அளிப்பதை ரத்து செய்ய வேண்டும். வேளாண் துறையில் தகுதியற்ற நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கு ஊதியத்தில் இருந்து வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.