/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசியல் கட்சியினரிடையே பெரும் குழப்பம் கரூரில் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் போட்டியிடும் வார்டுகள் என்னஅரசியல் கட்சியினரிடையே பெரும் குழப்பம் கரூரில் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் போட்டியிடும் வார்டுகள் என்ன
அரசியல் கட்சியினரிடையே பெரும் குழப்பம் கரூரில் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் போட்டியிடும் வார்டுகள் என்ன
அரசியல் கட்சியினரிடையே பெரும் குழப்பம் கரூரில் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் போட்டியிடும் வார்டுகள் என்ன
அரசியல் கட்சியினரிடையே பெரும் குழப்பம் கரூரில் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் போட்டியிடும் வார்டுகள் என்ன
கரூர்: விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கரூர் நகராட்சியில் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய கரூர் நகராட்சியில் இடம் பெற்றுள்ள 48 வார்டுகளிலும் உள்ள தெருக்கள் பற்றி விபரங்கள் தற்போது பதவியில் உள்ள 80 கவுன்சிலர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் எந்தெந்த வார்டுகள், தாழ்த்தப்பட்டோருக்கும், பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முழுமையான விபரங்கள் இல்லை. இந்நிலையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து நேற்று முதல், அ.தி.மு.க., தரப்பில் விருப்ப மனு வாங்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ளாட் சி அமைப்புகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், மாவட் ட அ.தி.மு.க., கட்சி அலுவலக த்தில் ஏராளமானோர் நேற்று ம னு கொடுத்தனர். அப்போது, கரூ ர் நகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட அடிப்படையில் மனு கொடுப்பதா? அல்லது பழைய நிலையில் உள்ள வார்டுகளின் அடிப்படையில் மனு கொடுப்பதா? என்ற குழப்பம் அ.தி.மு. க., வினரிடையே ஏற்பட்டது.
விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் எந்தந்த வார்டுகள் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள என்ற விபரம் தெரியாததால், ஒருவரை ஒருவர் சந்தித்து எந்த வார்டுகளுக்கு மனு கொடுப்பது என்று கேட்டு கொண்டிருந்தனர். பின்னர் இறுதியாக பழைய நிலையில் உள்ள வார்டுகளின் அடிப்படையில் விருப்ப மனு கொடுத்ததாக, அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் தெரிவித்தார். 'தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 4ம் தேதி முதலும், தி.மு.க., சார்பில் போட்டியிடுவோர் வரும் 5ம் தேதி முதலும் விருப்ப மனுக்களை அளிக்கலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., கம்யூனிஸ்ட், பா.ம.க ., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கரூர் மாவட்ட அளவில் உள்ளாட்சி தேர்தலில் போ ட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மனு பெற தீவிரமா க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
எனவே, வரும் உள்ளாட்சி தேர்தலில் கரூர் நகராட்சிக்கு விரிவாக்கம் செய்யப்பட்டதன் அடிப்படையில் தேர்தல் நடக்குமா? அல்லது பழைய நிலையில் தேர்தல் நடக்குமா ? விரிவாக்கம் செய்யப்பட்ட அடிப்படையில் தேர்தல் நடக்கும் என்றால் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 48 வார்டுகளில் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் போட்டியிட்ட ஒதுக்கப்பட்ட வார்டுகள் எவை என்பது குறித்து அதிகாரிகள் உடனடியாக அறிவிக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.