/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூரில் ரயிலை மறிக்க முயன்ற 15 பேர் கைதுகரூரில் ரயிலை மறிக்க முயன்ற 15 பேர் கைது
கரூரில் ரயிலை மறிக்க முயன்ற 15 பேர் கைது
கரூரில் ரயிலை மறிக்க முயன்ற 15 பேர் கைது
கரூரில் ரயிலை மறிக்க முயன்ற 15 பேர் கைது
ADDED : செப் 03, 2011 12:37 AM
கரூர்: பல்வேறு கோரிக்கைளை வலியூறுத்தி கரூரில் ரயிலை மறிக்க முயன்ற 15 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், 'சேவை கட்டணம்' என்ற பெயரில் அடிக்கும் கொள்ளையை தடுத்தல், தகவல் பெறும் உரிமை சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்துதல். நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல். பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபில் ஆகியோரை கண்டித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியூறுத்தி சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நேற்று ரயிலை மறிக்க சட்ட ஆர்வலர் சிவபாரதி தலைமையில் 15 பேர் கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தனர்.
அப்போது கடந்த மாதம், 'கரூர் ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் இல்லை' என்ற தலைப்பில் 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியான செய்தியை ஜெராக்ஸ் எடுத்து மக்களுக்கு விநியோகம் செய்தனர். பின்னர் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளே சென்ற சட்ட விழிப்புணர்வ இயக்க நிர்வாகிகளை, இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் ரயில்வே ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலை 5.30 மணியளவில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தால் கரூர் ரயில்வே ஸ்டேஷனில் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.