/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/20 நாளாகியும் குடிநீர் சப்ளையில்லை : பாலாஜி நகர் பொதுமக்கள் அவதி20 நாளாகியும் குடிநீர் சப்ளையில்லை : பாலாஜி நகர் பொதுமக்கள் அவதி
20 நாளாகியும் குடிநீர் சப்ளையில்லை : பாலாஜி நகர் பொதுமக்கள் அவதி
20 நாளாகியும் குடிநீர் சப்ளையில்லை : பாலாஜி நகர் பொதுமக்கள் அவதி
20 நாளாகியும் குடிநீர் சப்ளையில்லை : பாலாஜி நகர் பொதுமக்கள் அவதி
திருப்பூர் :அம்மாபாளையத்தை அடுத்துள்ள ராக்கியாபாளையம் பாலாஜி நகர் பகுதியில் 20 நாட்களாகியும் குடிநீர் வினியோகம் செய்யாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பகிர்மான குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதால், குடிநீர் வினியோகம் தாமதம் என கூறப்பட்டாலும், 20 நாட்களாகியும் சரி செய்யாமல் இருப்பது பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. பாலாஜி நகர் பகுதிக்கு, வாரம் ஒருமுறை குடிநீரும், இடைப்பட்ட நாட்களில் சப்பை நீரும் வினியோகிக்கப்படுகிறது; ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் உள்ளதால், அடுத்தமுறை குடிநீர் வரும் வரை பற்றாக்குறையே நீடிக்கிறது.பொதுமக்கள் புகார் தெரிவித்தால் மட்டும் ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை வினியோகம் நீடிக்கிறது. தூங்கும்போது நள்ளிரவில், குடிநீர் வினியோகிப்பது பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாலாஜி நகர் பகுதிக்கு விரைவில் குடிநீர் வினியோகம் செய்யவும், வினியோகத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து முறைப்படுத்தவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.