ADDED : செப் 02, 2011 11:14 PM
திருப்பூர் : 'திருமலையில் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்,' என, திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் தெரிவித்துள்ளது.
திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கை:திருமலையில் ஸ்ரீவாரி சேவை புரிய பக்தர்களை திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் அனுப்பி வருகிறது. பங்கேற்பவர்களுக்கு ரயில் டிக்கெட், சீருடை, தங்குமிடம் மற்றும் அனைத்து வசதிகளையும் இலவசமாக செய்து தருகிறது.இந்தாண்டு நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவுக்கு, ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் திருமலையில் 10 நாட்கள் தங்கி, சேவை புரிய பக்தர்களை அனுப்ப உள்ளது. பங்கேற்க விரும்புவோர் தங்களது இருப்பிட முகவரி ஜெராக்ஸ், கலர் போட்டோ இரண்டை, தாராபுரம் ரோட்டில் செயல்படும் திருமலை திருப்பதி தேவஸ்தான முன்பதிவு மையத்தில் கொடுத்து, பதிவு செய்யலாம் அல்லது 0421 - 2424 401 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.