Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/வருமான வரித்துறை "அதிரடி' கரூர் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை

வருமான வரித்துறை "அதிரடி' கரூர் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை

வருமான வரித்துறை "அதிரடி' கரூர் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை

வருமான வரித்துறை "அதிரடி' கரூர் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை

ADDED : செப் 01, 2011 11:29 PM


Google News

கரூர்: கரூரில், அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த பொன்மலர் ஃபைனான்ஸ் நிறுவனத்தில், நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால், கரூரில் உள்ள ஃபைனான்ஸ் அதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர். கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் செயல்பட்டு வரும் பொன்மலர் ஃ பைனான்ஸ் நிறுவனத்தில், நாள்தோறும் பல லட்சம் ரூபாய் பணம் பரிமாற்றம் நடைபெறுவதாக போலீஸூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் காலை, மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பிடிப்பட்ட கரூர் ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (24) உள்பட ஏழு பேரிடம் இருந்து கணக்கில் வராத, 75 லட்சத்து 83 ஆயிரத்து 320 ரூபாயை போலீஸார் கைப்பற்றினர்.



இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு, கரூர் டி.எஸ்.பி., மனோகரன் தலைமையிலான போலீஸார், பொன்மலர் ஃபைனான்ஸ் கம்பெனியில் சோதனை நடத்திய போது, கணக்கில் வராத, 46 லட்சத்து 60 ஆயிரத்து 190 ரூபாயை கைப்பற்றினர். ஃபைனான்ஸ் நிறுவனத்தில் கணக்காளராக இருந்த வாங்கப்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (30) என்பவரையும், போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, திருச்சி வருமான வரித்துறை துணை இயக்குநர் ஆல்பர்ட் தலைமையில், 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பொன்மலர் ஃபைனான்ஸ் கம்பெனியில் சோதனை நடத்தினர்.



அப்போது அங்கிருந்த ஆவணங்கள், விசிட்டிங் கார்டுகள், பணம் வரவு செலவு போன்ற விபரங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். நேற்று முன்தினம் மதியம், கரூரில் பொன் மலர் ஃபைனான்ஸ் கம்பெனியில் லட்சக்கணக்கில் பணம் கைப்பற்ற விபரம் வெளியானவுடன், பெரும்பாலான ஃபைனான்ஸ் கம்பெனிகள் திடீரென மூடப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையால், நேற்றும் கரூரில் பெரும்பாலான ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us