/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/களக்காட்டில் பால் பிரச்னைக்கு கலெகடர் நடவடிக்கை : பொதுமக்கள் மகிழ்ச்சிகளக்காட்டில் பால் பிரச்னைக்கு கலெகடர் நடவடிக்கை : பொதுமக்கள் மகிழ்ச்சி
களக்காட்டில் பால் பிரச்னைக்கு கலெகடர் நடவடிக்கை : பொதுமக்கள் மகிழ்ச்சி
களக்காட்டில் பால் பிரச்னைக்கு கலெகடர் நடவடிக்கை : பொதுமக்கள் மகிழ்ச்சி
களக்காட்டில் பால் பிரச்னைக்கு கலெகடர் நடவடிக்கை : பொதுமக்கள் மகிழ்ச்சி
களக்காடு : களக்காட்டில் பால் பிரச்னைக்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்ததையடுத்து களக்காடு மக்களுக்கு பால் மீண்டும் வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
களக்காட்டில் ஸ்ரீகிருஷ்ணாபால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது.
பால் கிடைக்காமல் பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் அவதிபட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து முன்புபோல் களக்காடு மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பால் வழங்க மாவட்ட கலெக்டருக்கு நான்குநேரி எம்.எல்.ஏ.நாராயணன், களக்காடு யூனியன் சேர்மன் தமிழ்செல்வன், வியாபாரிகள் சங்கம், சர்வகட்சி அமைப்பு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்ததையடுத்து களக்காடு பகுதி மக்களுக்கு முன்புபோல் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து களக்காடு பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுநல அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளது.