/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி வாலிபருக்கும் வெளிநாட்டு பெண்ணிற்கும் தமிழ் கலாச்சாரப்படி திருமணம்தூத்துக்குடி வாலிபருக்கும் வெளிநாட்டு பெண்ணிற்கும் தமிழ் கலாச்சாரப்படி திருமணம்
தூத்துக்குடி வாலிபருக்கும் வெளிநாட்டு பெண்ணிற்கும் தமிழ் கலாச்சாரப்படி திருமணம்
தூத்துக்குடி வாலிபருக்கும் வெளிநாட்டு பெண்ணிற்கும் தமிழ் கலாச்சாரப்படி திருமணம்
தூத்துக்குடி வாலிபருக்கும் வெளிநாட்டு பெண்ணிற்கும் தமிழ் கலாச்சாரப்படி திருமணம்
ADDED : செப் 01, 2011 02:03 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி வாலிபருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டினை சேர்ந்த பெண்ணிற்கும் தமிழ் கலாச்சார முறைப்படி நேற்று தூத்துக்குடியில் திருமணம் நடந்தது.
தூத்துக்குடி சுந்தரராமபுரத்தை சேர்ந்த சந்திரசேகரன்(அரசு பஸ் டிரைவர்), சுசீலா தம்பதியரின் மகன் செந்தில்குமார்(29). கேட்டரிங் டெக்னாலஜி முடித்துள்ள செந்தில்குமார் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார். செந்தில்குமார் வேலை பார்த்த ஹோட்டலில் பிலிப்பைன்ஸ் டார்லக் நகரத்தை சேர்ந்த மைக்கோல்லாசன் ஓரோப், எர்லின்டா கேப்ரியல் கேம்பாய் தம்பதியரின் மகள் கிறிஸ்டினா மைல்ஸ்(எ)ஸ்வேதா(21) என்பவரும் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடல் கடந்து வேலைக்கு சென்ற செந்தில்குமாரும், கிறிஸ்டினா மைல்ஸ்சும் படிப்படியாக தங்களது காதலையும் வளர்த்துள்ளனர். பிலிப்பைன்ஸை சேர்ந்த கிறிஸ்டினாவை காதலித்து வருவதாகவும், அவரைத் தான் திருமணம் செய்து கொள்ளபோவதாக செந்தில்குமார் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். மகனின் காதலுக்கு தடைபோட விரும்பாத பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒரே ஒரு நிபந்தனையும் மட்டும் விதித்தனர். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த கிறிஸ்டினா இந்து முறைப்படி தமிழ் கலாச்சார முறையில் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டால் தங்களது பரிபூரண சம்மதம் என்று தெரிவித்தனர். இதனை செந்தில்குமார் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரும், அவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செந்தில்குமாரின் பெற்றோர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தொடங்கினர். மணமகள் கிறிஸ்டினா கடந்த 20 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்தார். அவரை செந்தில்குமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்று உபசரித்து தங்கள் வீட்டில் தங்க வைத்தனர். மணமகன் செந்தில்குமார் கடந்த வாரம் துபாயில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தார். நேற்று முன்தினம் கிறிஸ்டினாவின் அம்மா மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் தூத்துக்குடிக்கு வந்தனர். செந்தில்குமாருக்கும், கிஸ்டினாவிற்கும் நேற்று காலை தூத்துக்குடி தெப்பகுளம் அருகில் உள்ள சுபஸ்ரீ திருமண மண்டபத்தில் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நல்லாசியுடன் இந்துமுறைப்படி புரோகிதர்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர். விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்த செந்தில்குமார் அவர்களது வழக்கபடி மணமகளுக்கு இரண்டு முறை தாலி காட்டி கிறிஸ்டினாவை தனது மனைவியாக்கி கொண்டார். இந்த புதுமணத்தம்பதியினர் வரும் 25ம் தேதி துபாய்க்கு மீண்டும் திரும்பி செல்ல உள்ளனர்.