இரட்டை கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை :ஐகோர்ட் ரத்து செய்தது
இரட்டை கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை :ஐகோர்ட் ரத்து செய்தது
இரட்டை கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை :ஐகோர்ட் ரத்து செய்தது
ADDED : செப் 01, 2011 01:55 AM
மதுரை : நெல்லை அருகே நடந்த இரட்டை கொலையில் எட்டு பேருக்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.நெல்லை பத்தமடை அருகே விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் இரு தரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டது.
ஒரு தரப்பினரின் வீடுகளுக்கு தீ வைத்ததாக கருதப்பட்ட, ஏகாம்பரம், முத்துக்கிருஷ்ணன் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஆவுடையப்பன், கிட்டப்பா, பூபதி, கருணாநிதிக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், ஆயிரநாதன், நல்லகண்ணு, நயினார், கோபாலுக்கு தலா ஆயுள் தண்டனையும் விதித்து, நெல்லை இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் 2010ல் தீர்ப்பளித்தது. மீதமுள்ள 12 பேரை விடுதலை செய்தது. ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரி எட்டு பேரும், ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு மனு செய்தனர். மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் கதிர்வேல், ஜெகநாதன் ஆஜராயினர். நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா, அருணா ஜெகதீசன் பெஞ்ச், ''மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது,'' என உத்தரவிட்டது.