கவர்னர்களை திரும்பப்பெறவேண்டும் : மத்திய அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல்
கவர்னர்களை திரும்பப்பெறவேண்டும் : மத்திய அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல்
கவர்னர்களை திரும்பப்பெறவேண்டும் : மத்திய அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல்

சிவகங்கை : ''மத்திய அரசு தன்னிச்சையாக கவர்னர்களை நியமித்துள்ளது.
10ம் வகுப்பு சமூக அறிவியலில் வ.உ.சிதம்பரனார், பாலகங்காதர திலகரை தீவிரவாதி போல் சித்தரித்துள்ளனர். அரசு உடனே இத்தவறுகளை மாற்றவேண்டும். இல்லாவிடில் பா.ஜ., போராட்டம் நடத்தும். நாட்டில் கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டுமே, மக்கள் நிம்மதியாக வாழ முடியும். பார்லிமென்ட்டில் தாக்குதல் நடத்திய அப்சல்குருவை உடனே தூக்கிலிடவேண்டும். கடந்த தி.மு.க., அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கை ரத்து செய்யுமாறு, மத்திய அரசுக்கு ஏன் பரிந்துரை செய்யவில்லை. இவ்விஷயத்தில் அ.தி.மு.க., தனது நிலையை ஏன் மாற்றியது.
வரும் எம்.பி.,தேர்தலில் காங்., வெற்றி பெறாது. அக்கட்சியை தோற்கடிக்கும் முயற்சியில் மக்கள் இறங்கி விட்டனர். உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ., போட்டியிடும். ஹசாரே போராட்டம், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற 100 நாளில் சாதனை விழா எடுத்தது வரவேற்கத்தக்கதல்ல. தொடர்ந்து 5 ஆண்டு எப்படி நிர்வாகம் நடத்துகின்றனர், என பார்த்து தான் சாதனையை கூறமுடியும். நாட்டில் தொழில்வளம், வேலைவாய்ப்பு, ஊழலற்ற நிர்வாகத்தை திறம்பட நடத்தும் அரசு தான் சாதனை செய்துள்ளதாக கூறமுடியும்,'' என்றார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொது செயலாளர் குருநாகராஜன், செயலாளர் ஜெயப்பிரகாஷ் உடனிருந்தனர்.